Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா ஆதரவாளர்களின் வாகனங்கள் சில திடீரென தாக்கப்பட்டமை திட்டமிட்ட செயலா?

In இந்தியா
Updated: 16:56 GMT, Feb 15, 2017 | Published: 16:53 GMT, Feb 15, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Kuruparan
admki

 

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம முன்பு சசிகலா ஆதரவாளர்களின் வாகனங்கள் சில திடீரென தாக்கப்பட்டமை குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றில் சரணைடந்தனர். இதற்காக சசிகலா உள்ளிட்டோர் தமது வாகனங்களில் சென்னையிலிருந்து பெங்களூர் புறப்பட்டனர்.

அவர்களுடன் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் அவரது ஆதரவாளர்களும் திரண்டு சென்றனர். சிறை வளாகம் சென்றதும் சசிகலாவின் வாகனம் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டது. கூட சென்றவர்களின் வாகனங்கள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. அதன்போது திடீரென சிலர் அந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பொலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை லேசாக தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சசிகலா ஆதரவாளர்கள் சிலர், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களைக் குறி வைத்துத் தாக்கியதாக கூறினர். இங்குதான் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகையில், உண்மையில் தாக்குதல் நடத்தியவர்களும் அதிமுகவினர்தான். அவர்கள்தான் தாக்குதல் நடத்தினர். சசிகலாவுடன் சென்ற வாகனங்கள் மட்டும்தான் தாக்கப்பட்டன. தமிழகப் பதிவெண் கொண்ட வேறு எந்த வாகனமும் தாக்கப்படவில்லை. அவை வழக்கம் போலத்தான் போய்க் கொண்டிருந்தன. உண்மையில் இந்த தாக்குதலைக் காரணம் காட்டி சசிகலாவுக்கு பெங்களூரில் பாதுகாப்பு இல்லை என்று கூறி, அவரை பெங்களூரு சிறையிலிருந்து சென்னைக்கு மாற்றும் திட்டமாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதனால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது போலத் தெரிகிறது. இரு மாநில பிரச்சினை போல மாற்றி சசிகலா உள்ளிட்டோரை தமிழக சிறைக்கு மாற்றும் திட்டத்தில் இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என கூறுகிறார்கள். இதுபோல சிறை மாற்றம் சட்டப்படி சாத்தியமே. விஐபி கைதிகள், சொந்த ஊர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதை பரிசீலிக்க சிறை நிர்வாகத்தால் முடியும். அந்த அடிப்படையில்தான் இப்படி ஒரு தாக்குதல் நடந்ததோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

admki
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg