Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெஹிவவளை-வெள்ளவத்தை புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படுகிறது

In இலங்கை
Updated: 17:24 GMT, Feb 15, 2017 | Published: 17:22 GMT, Feb 15, 2017 |
0 Comments
1335
icon_com
This post was written by : Vithushagan
images

தெஹிவளை முதல் வெள்ளவத்தை வரையிலான கரையோர புகையிரத போக்குவரத்து ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக தடைப்படும் என புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 27 ஆம் திகதி மாலை 4.00 மணி வரை குறித்த புகையிரத வீதி மூடப்பட்டிருக்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரு புகையிரத நிலையங்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள பாலமொன்று புனரமைப்புச் செய்யப்படவுள்ளதால் இந்த தடை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மாத்தறை, காலி மற்றும் அளுத்கமவில் இருந்து வரும் ரயில்கள் தெஹிவளை வரையில் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகும் ரயில்கள் வெள்ளவத்தை வரையிலும் பயணிக்கும் எனவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg