Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜீ.எஸ்.பி. பிளஸ் விவகாரம் மே 15இற்கு ஒத்திவைப்பு! – வரவேற்கிறார் சி.வி.

In இலங்கை
Published: 03:26 GMT, Feb 16, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் யோசனையை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்துவைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பின்போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதாகவும் இதனை தாம் வரவேற்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்திக்கொள்ளப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீள வழங்குவதற்கு அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது. குறித்த நிபந்தனைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg