Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோலகரமாக ஏப்ரல் 5ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடர்!

In கிாிக்கட்
Published: 05:06 GMT, Feb 16, 2017 |
0 Comments
1281
icon_com
This post was written by : Anojkiyan
ipl

10வது ஐ.பி.எல் ரி-ருவென்ரி தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் மே 21ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் தகுதி சுற்று மற்றும் நொக்கவுட் சுற்று போட்டிகள் நடைபெறும் இடமும், திகதியும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும் 2வது இடம் பிடித்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில், ஏப்ரல் 6ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணியை புனேவில் எதிர்கொள்கின்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஏப்ரல் 7ஆம் திகதி,தனது முதல் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணியை ராஜ்கோட்டில் சந்திக்கிறது.

டெல்லி டேர்டேவில்ஸ் ஏப்ரல் 8ஆம் திகதி பெங்களூரு அணியையும், இதே நாளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியையும் எதிர் கொள்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg