Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கொலை: இரு பெண்கள் கைது

In உலகம்
Published: 04:44 GMT, Feb 16, 2017 |
0 Comments
1395
icon_com
This post was written by : Risha

உலக நாடுகளுக்கு சவாலாக திகழ்ந்து வரும் வடகொரியா தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் மலேசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியட்னாம் கடவுச்சீட்டை கொண்டிருந்த முதலாவது சந்தேகநபர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், மற்றுமொரு பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிபடுத்தியுள்ளனர். எனினும், அது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கண்காணிப்பு கமராக்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.

45 வயதான கிம் ஜோங்-நாம், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை விஷ தாக்குதலுக்கு இலக்காகி திடீரென உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg