Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரத ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகளை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

In இந்தியா
Updated: 04:59 GMT, Feb 16, 2017 | Published: 04:59 GMT, Feb 16, 2017 |
0 Comments
1164
This post was written by : Shailu

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஒப்புதலின் மூலம் ஐந்து வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்படவுள்ளதோடு, இதன் மூலம் செலவீனம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறையும் என தெரியவந்துள்ளது.

அத்தோடு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுகின்ற நிலையில், ஐந்து துணை வங்கிகளை இணைப்பதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் சொத்துமதிப்பு சுமார் 37 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் 22,500 கிளைகள் மற்றும் 58 ஆயிரம் பணம் எடுக்கும் இயந்திரம் கொண்ட வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg