Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெண்டைக்காய் சிப்ஸ்

In
Updated: 05:28 GMT, Feb 16, 2017 | Published: 05:28 GMT, Feb 16, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Elakkiya
FB_IMG_1460701398927

மாவை நேரத்தில் தேநீர் குடிப்பது பலரது வழக்கமாக உள்ளது. அதிலும் எதையேனும் சாப்பிட்டவாறே தேநீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும்.

எனவே மாலைநேர தேநீருடன் சாப்பிடுவதற்கு உகந்த வெண்டைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
பிஞ்சு வெண்டைக்காய் – 20,
கரம்மசாலா தூள் – கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,
அரிசி மா – 1 டீஸ்பூன்,
சோள மா – கால் டீஸ்பூன்,
கடலை மா – 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீளமாக துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் கரம் மசாலா, அரிசி மா, மல்லித் தூள், சோள மா, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரிதது எடுக்கவும்.

வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg