Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியை தற்போதைய நிலைமையில் அசைக்க முடியும் என எண்ணவில்லை: மேக்ஸ்வெல் கருத்து

In கிாிக்கட்
Published: 05:51 GMT, Feb 16, 2017 |
0 Comments
1310
icon_com
This post was written by : Anojkiyan
dc-Cover-jtefavkjsh0b6gnft4h1m5ksf2-20170215133216.Medi

சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியை தற்போதைய நிலைமையில் அசைக்க முடியும் என எண்ணவில்லை என அவுஸ்ரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நான் கோஹ்லியைச் சீண்டுமாறு எதுவும் கூறப்போவதில்லை. அவரைச் சீண்டுவதன் மூலம் அவர் தவறான ஷொட்களை அடிக்க வைக்க முடியும் என்றால் அவரைச் சீண்டலாம் என்றே நான் கூறுவேன். ஆனால் இப்போதைக்கு அவரை எதுவும் அசைக்க முடியும் என எண்ணவில்லை.

கோஹ்லி இத்தகைய நிலையில், இருக்கிறார் என்றால் அது அவருடைய உத்தி என்பதெல்லாம் இல்லை. அவர் இப்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளார் என்பதே அர்த்தம். சில வீரர்களுக்கு இத்தகைய தொடர்ச்சி அமைந்து விடும். இம்மாதிரி தருணங்களில் அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது அவ்வளவே.

ஏதாவது ஒரு துரதிர்ஷ்டமான முறையில் அவர் ஆட்டமிழந்தாரென்றால், உதாரணமாக முக்கிய கட்டத்தில் அவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார் என்றால் அது அவரிடத்தில் சிறு ஐயத்தை ஏற்படுத்தும், ஒரு தீர்மானமின்மையை ஏற்படுத்தும்.

எனவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அவரிடத்தில் இத்தகைய ஐயத்தை எழுப்புவோம், அது அவரது துடுப்பாட்ட உத்தி குறித்த ஐயத்தை எழுப்புவோம், அங்கிருந்து நாங்கள் அவரை முறியடிப்போம். என கூறினார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க அவுஸ்ரேலிய அணி, இந்தியா வந்துள்ளது. இதன் முதல் போட்டி, எதிர்வரும் 23ஆம் திகதி புனேயில் ஆரம்பமாகவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg