Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேகமாக பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானி உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:40 GMT, Feb 16, 2017 | Published: 06:40 GMT, Feb 16, 2017 |
0 Comments
1562
This post was written by : Elakkiya

நியூஸிலாந்து கிறிஸ்ட்சேர்ச் நகரின் போர்ட் ஹில்ஸ் பகுதியில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் ஆயிரத்திற்கு அதிமானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரான கிறிஸ்ட்சேர்ச்சில் போர்ட் ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) காட்டுத்தீ பரவ ஆரம்பித்தது.  இந்நிலையில் ஒரே இரவில் சுமார் 1800 ஹெட்டேயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக அவசரகாலநிலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் தொலைக்காட்சி தகவல்களின் பிரகாரம் 11 வீடுகள் மற்றும் இரண்டு பெரிய கட்டடங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக 15 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் நிரந்தர வானூர்த்திகள் போன்றன பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேற்படி காட்டுத்தீ பரவலை கண்காணிப்பதற்காக நியூஸிலாந்து பிரதமர் தன்னுடைய ஏனைய அரசியல் சந்திப்புக்கள் யாவற்றையும் ரத்து செய்துள்ளதாக தெரியவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg