Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்வராக நட்ராஜ் நியமிக்கப்பட வேண்டும்: மார்க்கண்டேய கட்ஜு

In இந்தியா
Updated: 06:19 GMT, Feb 16, 2017 | Published: 06:11 GMT, Feb 16, 2017 |
0 Comments
1338
icon_com
This post was written by : Risha
mark

தமிழக முதல்வராக ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி நட்ராஜை நியமிப்பது குறித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

ஆட்சிய அமைக்க அதிகாரம் கோரிவரும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே ஓய்வுபெற்ற நேர்மையான பொலிஸ் அதிகாரியும், சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜை முதலமைச்சராக்குவது குறித்து அ.தி.மு.க.வினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சசிகலாவுக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாகச் செயல்படும் நட்ராஜை முதல்வராக்கினால், அதை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg