Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். மாவட்ட போசாக்கு மட்டம் குறித்து ஆராயப்பட்டது

In இலங்கை
Published: 07:53 GMT, Feb 16, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

யாழ். மாவட்டத்தின் போசாக்கு பல்துறைசார் செயற்பாட்டுக்குழுக் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது.

யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மாகாணத்தின் தாய் சேய் போசாக்கு தொடர்பில் ஆராயப்பட்டதோடு, போசாக்கை மேம்படுத்துவதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

இதேவேளை நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக, சுகாதாரம் தொடர்பில் மாதாந்த கூட்டங்களை நடத்துதற்கும் போசாக்கு ஆபத்துக்குள்ளான குடும்பங்களை நோக்கி விசேட வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

neutrition (4) neutrition (1) neutrition (5) neutrition (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg