Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியம்- கனடாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அனுமதி

In ஐரோப்பா
Updated: 08:20 GMT, Feb 16, 2017 | Published: 08:18 GMT, Feb 16, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Elakkiya
ex

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக விளங்கிய மேற்படி சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த வாக்கெடுப்பு நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதன்போது, 408 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 254 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இந்நிலையில், எட்டு வருடங்களின் பின்னர் பெரும்பான்மையாக 154 வாக்குகளை பெற்று ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரங்களை அடிமட்டத்திற்கு தள்ளும் என்பதுடன் பன்னாட்டு நிறுவனங்களின் பொதுக் கொள்கைகளை அனுமதிக்கும் என்பதே எதிர்பாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

வாக்கெடுப்புக்கு முன்னதாகவும் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg