Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்

In
Updated: 08:35 GMT, Feb 16, 2017 | Published: 08:35 GMT, Feb 16, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Elakkiya
we

பிரெக்சிற் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடுமையான சவாலாக அமையும் என ஜேர்மனிய அரசியல்வாதியும், ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவருமான மன்ஃபிரெட் வெபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பொதுஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானித்துள்ள பிரித்தானியா எதிர்வரும் மார்ச் மாத இறுதிப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் திட்டமிட்டுள்ளது.

பிரித்தானியாவின் இந்த பிரெக்சிற் விவகாரம், ஐரோப்பிய மண்டலத்தில் கிரேக்கத்தை வைத்திருத்தல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள அகதிகள் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு முக்கிய சவாலாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மன்ஃபிரெட் வெபர் ‘பிரெக்சிற் விவகாரம் பெருமளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும். குறிப்பாக பிரித்தானிய மக்களுக்கு. நிச்சயமாக இதனை யாரும் விரும்ப மாட்டார்கள் எனினும் அதுவே உண்மை நிலைப்பாடு. இந்த நிலைப்பாடுகளை நாம் அங்கீகரிக்க தொடங்க வேண்டும்.
நிச்சயமாக இது எமக்கு எளிதான பணியாக இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg