Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய பரிமாணத்தில் உலகின் மிகப் பழமையான லோர்ட்ஸ் மைதானம்!

In கிாிக்கட்
Updated: 09:13 GMT, Feb 16, 2017 | Published: 09:13 GMT, Feb 16, 2017 |
0 Comments
1336
This post was written by : Anojkiyan

பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியாக, கிரிக்கெட் விளையாட்டின் ‘மெக்கா’ என அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டின் லோர்ட்ஸ் கிரிக்கெட் சங்கம் புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி இனி மைதானம் முழுவதும் மரபுசார் எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் மட்டுமே உபயோகப்படுத்தப்பட இருக்கிறது. மைதானம் முழுவதுமாக சோலார் தகடுகள், சிறிய ரக காற்றாலை ஆகியவை பொருத்தப்பட்டு, அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல், மின்சார செலவையும் கணிசமாக குறைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் இங்கிலாந்தில் உள்ள அனைத்து மைதானங்களும் படிப்படியாக மரபுசார் எரிசக்திக்கு மாற்றப்படும் எனவும் லோர்ட்ஸ் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg