Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு தாக்கல்

In சினிமா
Updated: 10:47 GMT, Feb 16, 2017 | Published: 10:47 GMT, Feb 16, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Risha

பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகர் ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் ‘ரயீஸ்’ திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் ஷாருக்கான் கடந்த மாதம் 24ஆம் திகதி மும்பையில் இருந்து டெல்லிக்கு ரயிலில் பயணித்திருந்தார்.

இதன்போது ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரசிகர்கள் குவிந்ததால் அங்கு பாரிய நெரிசல் ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் உள்ள கடைகள் சேதமாக்கப்பட்டதுடன், பொதுசொத்துக்களுக்கும் பலத்த சேதமடைந்தன.

இது தொடர்பில் கடை உரிமையாளர் ஒருவர் கோடா ரயில்வே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg