Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யேமனில் சவுதி தலைமையிலான விமான தாக்குதலில் பத்து பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 10:03 GMT, Feb 16, 2017 | Published: 10:02 GMT, Feb 16, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Elakkiya
azx

யேமன் தலைநகரின் வடக்கு பகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சவுதி தலைமையிலான கூட்டணியின் விமான தாக்குதலில் ஒன்பது பெண்களும் ஒரு குழந்தையும் என பத்துபேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யேமன் தலைநகர் சனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அர்ஹாப் மாவட்டத்தில் பெண் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வீடு ஒன்றின் மீதே இந்த விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg