Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத மருந்து விற்பனை: ஒருவர் கைது

In இலங்கை
Published: 10:34 GMT, Feb 16, 2017 |
0 Comments
1228
This post was written by : Vithushagan
unnamed (2)

மஸ்கெலியா லக்க்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நேற்று (புதன்கிழமை)   கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கடையில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் அப்பகுதி மக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கான சில மருந்து வகைகள் அந்த கடை உரிமையாளரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் விசேட பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விரைந்த பொலிஸார் அக்கடையை சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரை விசாரணைகளுக்கு உட்படுத்தியபின் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சுமார் 500ற்கும் மேற்பட்ட மருந்து வகைகளை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (வியாழக்கிழமை) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜரப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

unnamed (1) unnamed (2) unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg