Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூகுள் நிறுவனத்தில் வேலை கேட்கும் ஏழு வயது பிரித்தானிய சிறுமி

In
Updated: 11:02 GMT, Feb 16, 2017 | Published: 11:01 GMT, Feb 16, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Elakkiya
pasted image at 20170215 1047 am

பிரித்தானியாவின் ஹியர்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரிக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கேட்டு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த கடிதத்தில், தன்னுடைய பெயர் சோலே என்று குறிப்பிட்டுள்ள குறித்த சிறுமி, கூகுள் நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய விருப்பம் என்றும் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தால், பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்றும் அங்கு வேலை பார்ப்பது ஒரு விளையாட்டு போன்று இருக்கும் என்றும் தனது தந்தை கூறியதாகவும் எழுதியுள்ளார்.

மேலும், தான் தற்போது டப்லெட் பயன்படுத்தி வருவதாகவும், அதில்; ரோபோட் விளையாட்டுக்கள் மற்றும் பலவற்றை கற்றுக் கொள்வதுடன் கணனி குறித்து அனைத்தையும் அறிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கணனி மீதுள்ள தன்னுடைய ஆர்வத்தினால் தந்தை விரைவில் கணனி வாங்கி தருவதாக தெரிவித்துள்ளதாவும் கடிதத்தில் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கூகுளில் பணிபுரிய வேண்டும் என்றால், உங்கள் முகவரிக்கு இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று தந்தை கூறியதால்; கடிதம் எழுதியுள்ளதாகவும், நிச்சயம் ஒரு நாள் கூகுளில் பணிபுரிவேன் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.

இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘தங்களுடைய கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி, நீங்கள் கணனி மற்றும் ரோபோட் போன்றவைகளில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள், அதனால் தங்களுடைய குறிக்கோளில் கவனம் சிதறாமல் செயல்படுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும். தங்கள் கல்வியை நிறைவு செய்தபின்னர் வேலை வாய்ப்பு தொடர்பாக தங்கள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்புங்கள்’ என்று கூறியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (31)
625.0.560.350.160.300.053.800.668.160.90 (30)
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg