Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீண்ட இழுபறிக்கு பின்னர் வர்த்தமானியில் வெளியாகிறது எல்லை நிர்ணய அறிக்கை

In இலங்கை
Updated: 10:56 GMT, Feb 16, 2017 | Published: 10:55 GMT, Feb 16, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
local government

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கை நீண்ட இழுபறிக்கு பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று இத்தகவலை அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயத்தில் பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவித்து தேர்தல் பிற்போடப்பட்டு வந்த நிலையில், எல்லை நிர்ணயம் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை கடந்த மாதம் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த மாதமே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதிலும், அதில் சில தொழிநுட்ப மற்றும் அச்சுப் பிழைகள் காணப்படுவதாக தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg