Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயக்குநராக அறிமுகமாகிறார் காயத்ரி ரகுராம்

In சினிமா
Updated: 12:06 GMT, Feb 16, 2017 | Published: 12:06 GMT, Feb 16, 2017 |
0 Comments
1290
icon_com
This post was written by : Risha
gayathri-raghuram01600

நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தற்போது ‘யாதுமாகி நின்றால்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

பின்னணி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் காயத்ரி ரகுராம்.

குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டாயத்தின் பேரில் பின்னணி நடனமாடும் தொழிலுக்கு சென்ற பெண்ணொருவர் எதிர்நோக்கிய கொடுமைகள், அவலங்கள் என்பவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

பின்னணி நடனமாடும் பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் முதல் தமிழ் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg