Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் : ஓ. பன்னீர் செல்வம் சபதம்

In இந்தியா
Updated: 18:02 GMT, Feb 16, 2017 | Published: 17:55 GMT, Feb 16, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Vithushagan
ops83566-16-1487259910 (1)

சசிகலா குடும்பம்தான் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளதெனவும் இந்த ஆட்சியை நீக்கி  மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களே தற்போது அவரது வீட்டில் உள்ளனர். சசிகலாவைத் தவிர அவரது குடும்பத்தில் இருந்து யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இப்போது, ஜெயலலிதா ஒதுக்கி வைத்தவர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இந்த ஆட்சியை நீக்கி  மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்.

சட்டமன்ற உறுப்பினர்கள நியாயமான முடிவை எடுக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம். மக்கள் விரோத ஆட்சியை நீக்கும் வரை ஓயமாட்டோம்” என்று தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg