Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்வர் தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

In
Updated: 11:56 GMT, Feb 17, 2017 | Published: 03:34 GMT, Feb 17, 2017 |
0 Comments
1299
icon_com
This post was written by : Risha
edapadi_1660253f

சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் ஆலோசனை நடத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூவத்தூரில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சபாநாயகர் தனபாலுடன் சந்திப்பு

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான அணியினர் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஓ.பி.எஸ். அணி சார்பில் மூத்த நிர்வாகிகளான செம்மலை, மாஃபா பாண்டியராஜன், பொன்னையன் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.

நாளை சட்டமன்றத்திற்கு வரும்போது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.விலிருந்து சசிகலா நீக்கம்: மதுசூதனன்

அ.தி.மு.க.விலிருந்து சசிகலா, டிடிவி. தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க சட்ட விதிகளின்படி தான் அவைத் தலைவராக உள்ள நிலையில், அதன் அடிப்படையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மதுசூதனன் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க நட்ராஜ் முடிவு

சட்டமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் தீர்மானித்துள்ளார்.

இந்த நடவடிக்கையால், கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தனது பதவி பறிபோனாலும் கவலை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கூடுகின்றனர்

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், வாக்கெடுப்பின் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg