Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறிவிநியோக மோசடி: மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை

In இலங்கை
Updated: 04:01 GMT, Feb 17, 2017 | Published: 04:01 GMT, Feb 17, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Risha
central bank

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் எதிர்வரும் 21ஆம் திகதி இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரண்டு நீதியரசர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகம் உள்ளடங்களாக இந்த குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

இந்த குழு ஏற்கனவே சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி இருந்த நிலையில் தற்போது முறிவிநியோக மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஒத்துழைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த குழு 3 மாதங்களுக்குள் தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg