Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவை சொந்த மண்னில் சாய்க்குமா இலங்கை: இன்று பலப்பரீட்சை

In கிாிக்கட்
Updated: 04:52 GMT, Feb 17, 2017 | Published: 04:42 GMT, Feb 17, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Anojkiyan
Finch-Malinga

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் விளையாட இலங்கை அணி அவுஸ்ரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்தியூஸ் காயமடைந்துள்ளதால் இத்தொடரில் உபுல் தரங்க அணியின் தலைவராக செயற்படுகிறார்.

மேலும், இத்தொடரில், முன்னாள் ரி-ருவென்ரி தலைவரும், புயல் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்க, ஒன்றரை வருடங்களுக்கு பின் அணியில் இணைந்துக்கொண்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த அவுஸ்ரேலியா பிரதமர் தெரிவு அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில், அவுஸ்ரேலிய அணி செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளும் இளம் வீரர்களை கொண்ட அணி என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை கணிப்பது கடினம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg