Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்: ஐ.சி.சி. தகவல்

In கிாிக்கட்
Updated: 05:28 GMT, Feb 17, 2017 | Published: 05:28 GMT, Feb 17, 2017 |
0 Comments
1252
This post was written by : Anojkiyan

கிரிக்கெட் போட்டிகளின் போது ஏற்படும் சந்தேகத்திற்கிடமான ஆட்டமிழப்புகளை மீள் பரீசிலனை முறையில் மூன்றாம் நடுவரிடம் கோரும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகள் விகிதம் 94 சதவீதத்தில் இருந்து 98.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் ஐ.சி.சி இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘ஐ.சி.சி. நடுவர் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எல்லா போட்டிகளிலும் தவறுக்கு இடமின்றி சரியான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு.
டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் நடுவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதன் மூலம் தற்போது சரியான முடிவுகள் எடுக்கப்படும் விகிதம் 94 சதவீதத்தில் இருந்து 98.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது’ என கூறிள்ளார்.

குறித்த டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முறைமையை ஆரம்பத்தில் பல கிரிக்கெட் விளையாடும் நாடுகள் எதிர்த்தாலும் முழுமையாக எல்லா நாடுகளும் இந்த முறைமையை பின்பற்றுகின்றன. இதன் முடிவுகள் சில போட்டிகளில் பாதகமான முடிவுகளை வழங்புவதால் இன்றும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இம் முறைமை குறித்த கசப்புணர்வு உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg