Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட மறுப்பு தெரிவித்த தினேஷ் சந்திமால்!

In கிாிக்கட்
Updated: 07:35 GMT, Feb 17, 2017 | Published: 07:35 GMT, Feb 17, 2017 |
0 Comments
1900
This post was written by : Anojkiyan

இந்தியாவில் நடைபெறும் ரி-ருவென்ரி கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் மறுத்துள்ளார்.

சமீபகாலமாக நடைபெற்ற போட்டிகளில் பெரிதும் சோபிக்கமால் கடும் விமர்சனத்துக்குள்ளான சந்திமால், ஐ.பி.எல். கிரிக்கெட் நடைபெறும் காலத்தில், தன்னை வலுப்படுத்திக்கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு பணம் ஒன்றும் பெரிய விடயம் இல்லை எனவும் தனது தாய் நாட்டுக்கு விளையாடுவதே பெருமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் சந்திமால் சிறப்பாக பிரகாசிக்காத காரணத்தால், ஒருநாள் தொடரின் இறுதி இரு போட்டிகளிலும் அவர் பங்கேற்காத நிலைமை ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg