Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

In ஐரோப்பா
Published: 08:01 GMT, Feb 17, 2017 |
0 Comments
1070
icon_com
This post was written by : Elakkiya

ஜேர்மனியில் நடைபெறும் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, சிக்கலான மற்றும் மாற்றமடையும் சர்வதேச, பிராந்திய சூழ்நிலைகளின் விரிவான மூலோபாய பங்காளிகளான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் ஒருவருக்கு ஒருவர் அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஆழப்படுத்தவும் சர்வதேச விவகாரங்களில் தமது மூலோபாயங்களை நிலைப்படுத்தவும் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரஷ்யாவுடன் சீனா உயர்மட்ட பரிமாற்றங்களை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டு சீனாவுடன் முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச விவகாரங்களில் மூலோபாய தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் வல்ரோவ் உறுதி அளித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து, பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை உயர்மட்ட பிரதிநிதிகளையும் வாங் ஜி சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg