Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீண்ட போராட்டத்தின் பின்னர் தனது உறவுகளை சந்தித்த எதியோப்பிய வீரர் பைசியா லிலிசா!

In விளையாட்டு
Updated: 08:52 GMT, Feb 17, 2017 | Published: 08:52 GMT, Feb 17, 2017 |
0 Comments
1152
This post was written by : Anojkiyan

எதியோப்பிய அரசாங்கத்திற்கெதிராக சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்த எதியோப்பிய நெடுந்தூர ஓட்ட வீரர் பைசியா லிலிசா நீண்ட போராட்டத்தின் பின்னர் தனது உறவுகளை சந்தித்துள்ளார்.

பிரேஸிலின் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் மரதன் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற பைசியா, எதியோப்பிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சைகை மூலம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இதனால், அவரை எதியோப்பியாவிற்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதனால், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த பைசியா, பல மாதங்களின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.

எதியோப்பிய அரசிற்கெதிராக தொடர்ந்தும் சர்சையான கருத்துக்களை வெளியிட்டுவரும் பைசியா லிலிசாவுக்கு எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg