Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிம் ஜோங்-நாம் கொலையுடன் தொடர்புபட்ட மேலும் ஒருவர் கைது

In உலகம்
Published: 08:35 GMT, Feb 17, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Elakkiya

வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரன் கிம் ஜோங்-நாம் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) வரைக்கும்   மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே மூன்றாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார்.  முன்னதாக  இந்தோனேஷிய கடவுச்சீட்டு உடைய நபர் ஒருவரும் வியட்நாம் கடவுச்சீட்டு உடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் தவிர மேலும் மூன்று சந்தேகநபர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் கிம் ஜோங்- நாமின் படுகொலையின் பின்னணியில் வியட்நாம் மற்றும் கொரியர்கள் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் மலேசிய சட்டதிட்டத்தின் பிரகாரம் உள்ளூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி அதன்பின்னரே மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சந்தேகநபர்கள் என்று கருதப்படும் ஏனையோர் நாட்டைவிட்டு வெளியேறாதவாறு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் கண்காணிப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், கிம் ஜோங்- நாமின் படுகொலை மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg