Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் பிரஜைகள் குழு தலைமையில் விசேட குழு கேப்பாப்புலவிற்கு விஜயம்

In இலங்கை
Updated: 12:57 GMT, Feb 17, 2017 | Published: 08:48 GMT, Feb 17, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Risha
mmm

கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு கிராம மக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பிரஜைகள் குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர் அந்தோனி சகாயம், அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் உட்பட மன்னாரில் இருந்து விசேட குழு கேப்பாப்பிலவுக்கு சென்றனர்.

அங்கு சென்ற குழுவினர் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி பதாதைகளை ஏந்தி கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

பின்னர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

mmm2 mmm1

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg