Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித குரங்கின் கொலைக்கு விலங்குகள் பாதுகாப்பு குழு கண்டனம்

In
Updated: 09:21 GMT, Feb 17, 2017 | Published: 09:20 GMT, Feb 17, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Elakkiya
Rare+Bornean+Orangutan+Born+Chicago+Brookfield+00f4GdKdLdul

இந்தோனேஷியாவில் அருகிவரும் உயிரினமாக கருதப்படும் மனித குரங்கின் கொலைக்கு வன விலங்கு பாதுகாப்பு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் பனை விவசாய வளாகத்திற்குள் தவறுதாகச் சென்ற மேற்படி மனிதக் குரங்கினை அங்கிருந்த பணியாளர்கள் கொலை செய்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டது.

இது குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் புதன்கிழமை பத்து பணியாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மேற்படி கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர், ‘இந்த வழக்கினை உடனடியாக விசாரித்து கொலையாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்று பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது முதல் வழக்கு அல்ல. மத்திய கலிமன்டனிலும் இதுபோன்ற வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் போர்னியோ ஓரங்குட்டான் பாதுகாப்பு அறக்கட்டளையினால் கையாளப்படுகின்றது. ஆனால் ஓரங்குட்டான் குரங்கை கொன்று உணவாக உட்கொள்வது இதுவே முதல் வழக்காகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் போர்னியோ ஓரங்குட்டான் வேட்டையாடல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக அருகிய மற்றும் அழிந்துவரும் இனமாக கருதப்படுகின்றது.

இந்தோனேஷிய சட்டத்தின் பிரகாரம், குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg