Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யூசுப் பதானுக்கு விளையாட அனுமதி அளிக்கப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானது: பி.சி.சி.ஐ

In கிாிக்கட்
Published: 10:12 GMT, Feb 17, 2017 |
0 Comments
1398
icon_com
This post was written by : Anojkiyan
pathan_1806341c-1403764556

ஹொங் கொங் ரி-ருவென்ரி லீக் தொடரில் விளையாட, இந்திய அணியின் சகல துறை வீரரான யூசுப் பதானுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று இந்தியக் கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.

சமீபத்தில் யூசுப் பதான், ஹொங் கொங் ரி-ருவென்ரி லீக் தொடரில், கவ்லூன் கேன்டன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் இதில் உண்மை இல்லை என இந்தியக் கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

ஹொங் கொங் ரி-ருவென்ரி லீக் தொடர் மார்ச் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த லீக்கில் பாகிஸ்தானின் சயிட் அப்ரிடி, இங்கிலாந்தின் கெய்ல் மில்ஸ், இலங்கையின் சங்ககார, டில்ஷான், மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி, நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகியோர் விளையாடுகின்றனர்.

இந்திய அணியின் யூசுப் பதான் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg