Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாகன சாரதிகளுக்கான தண்டப்பணத்தை 50 ஆயிரம்வரை அதிகரிக்க நடவடிக்கை

In இலங்கை
Updated: 12:32 GMT, Feb 17, 2017 | Published: 09:46 GMT, Feb 17, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Risha
fine

வாகன சாரதிகளுக்கான தண்டப்பணத்தை 50 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்க வேண்டும் என தண்டப்பணம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் வாகன சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு தண்டப்பணத்திற்கு மேலதிகமாக 3 மாதத்தில் இருந்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் மேற்படி குழு பரிந்துரைத்துள்ளது.

குறித்த அறிக்கை எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் போக்குவரத்து அமைச்சரினால் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வாகன சாரதிகள் மேற்கொள்ளும் தவறுகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடுவதற்கு 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு பேருந்து சங்கம் மற்றும் முச்சக்கர வண்டி சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், பணிபகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டதால் நாடே ஸ்தம்பிதமடைந்தது.

இதனையடுத்து இது குறித்து ஆராய்ந்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவினர் இவ்வாறு தண்டப்பணத்தையும், தண்டனையையும் அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை முன்வைத்துள்ளனர்.

இந்த குழுவின் பரிந்துரைக்கு பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி சங்கத்தினர் அமைச்சரிடம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg