Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்தை சொந்த மண்ணில் பந்தாடியது தென்னாப்பிரிக்கா அணி!

In கிாிக்கட்
Published: 10:28 GMT, Feb 17, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Anojkiyan
amla

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ஈடன் பார்க் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அசிம் அம்லா 62 ஓட்டங்களையும், டு பிலிஸ்சிஸ் 36 ஓட்டங்களையும், டுமினி 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூசிலாந்து அணி சார்பில் ட்ரன்ட் பொல்ட் மிகச் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். அவரைப் போலவே கொலின் டீ கிரான்தொம் இரண்டு விக்கட்டுக்களைப் கைப்பற்றினார்.

தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 14.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 78 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், டொம் புரூஸ் 33 ஓட்டங்களையும், சௌத்தீ 20 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். மிகச்சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 4 விக்கட்டுக்களை வீழ்த்தி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg