Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளராக கைப் நியமனம்!

In கிாிக்கட்
Published: 10:36 GMT, Feb 17, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Anojkiyan
luck7

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் குஜராத் லயன்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் வீரர் மொஹமட் கைப், நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட சுரேஷ் தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி, அரையிறுதி போட்டி வரை முன்னேறியது. இம்முறையும் இந்த அணி சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டுமென கருதி அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

10வது ஐ.பி.எல் ரி-ருவென்ரி தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் மே 21ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 7ஆம் திகதி, தனது முதல் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராஜ்கோட்டில் சந்திக்கிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg