Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

G20 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Published: 11:06 GMT, Feb 17, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Sylviya
11

ஜேர்மனியில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட G20  உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம், நேற்று முன்னெடுக்கப்பட்டதாகவும் சுமார் 150 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலுந்துகொண்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

G20  நாடுகளின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ள 90 சதவீதம் G20  நாடுகளினதுடையதே. அவர்கள் வகுக்கும் கொள்கைகள் வறியவர்களுக்கு எதிரானதாகவே உள்ளன” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “G20 நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் உள்ளமையாலேயே நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். ஏனெனில் குறித்த உச்சிமாநாட்டில் அவர்கள் அதிகளவில் செல்வாக்கு செலுத்தக் கூடும். குறித்த செல்வாக்கு ஏனையோருக்கு பாதகமானதாக இருக்கக் கூடாது என்பதே எனது விருப்பம். என்ன செய்வது? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg