Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிராட்மனுடன் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கௌரவம் என்கிறார் அஸ்வின்

In கிாிக்கட்
Updated: 11:34 GMT, Feb 17, 2017 | Published: 10:49 GMT, Feb 17, 2017 |
0 Comments
1240
This post was written by : Anojkiyan
dc-Cover-r6dqiial0n3rk6aaqqrjid7rn1-20160216122010.Medi

கிரிக்கெட்டின் தந்தை என வர்ணிக்கப்படும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் டொன் பிராட்மனுடன் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய  கௌரவம் என இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அண்மையில், அவுஸ்ரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ்வாக், பந்து வீச்சின் பிராட்மன் அஸ்வின் என வெகுவாக பாராட்டி இருந்தார்.

அஸ்வினின் பந்து வீச்சும், விக்கெட்டை வீழ்த்தும் திறமையும் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருப்பதாகவும், அவரது சாதனைகள் வியப்புக்குரியதாக இருப்பதாகவும் ஸ்டீவ்வாக் பாராட்டு மழையில் அஸ்வினை நனைத்திருந்தார்.

இந்நிலையில், ஸ்டீவ்வாக்கின் பாராட்டு குறித்து, அஸ்வின் கூறுகையில், பிராட்மனுடன் என்னை ஒப்பிட்டு சிறந்தவர் என்று ஸ்டீவ்வாக் கூறி இருப்பது நிச்சயமாக எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். அவருடன் நான் விளையாடியது கிடையாது.

ஸ்டீவ்வாக் ஒரு சிறந்த அணித்தலைவராக இருந்து பல ஆண்டுகளாக பாராட்டப்பட்டவர். அவுஸ்ரேலிய அணியை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர். அவர் மற்ற அணித்தலைவர்களில் இருந்து மாறுபட்டவர்.

கடினமான உழைப்பால் அவர் அனைத்து பெருமையையும் பெற்றார். எனது பந்துவீச்சு செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்த எப்போதுமே கடினமாக உழைப்பேன். என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg