Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்த திட்டமிட்டவர்கள் கைது

In இந்தியா
Published: 11:25 GMT, Feb 17, 2017 |
0 Comments
1341
icon_com
This post was written by : Surenth
Police Panneerselvam

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்த திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரணி நடத்த திட்டமிட்டிருந்த மதுரை மாநகர் எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளரும்,, மாநகராட்சி முன்னாள் தெற்கு மண்டல தலைவருமான சாலைமுத்து உள்ளிட்ட 10 பேரை சுப்பிரமணியபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, சுப்பிரமணியபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 100 இற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணிகளை நடத்த திட்டமிடுபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg