Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும்: ஓ.பி.எஸ் வேண்டுகோள்

In இந்தியா
Updated: 15:17 GMT, Feb 17, 2017 | Published: 12:08 GMT, Feb 17, 2017 |
0 Comments
1612
icon_com
This post was written by : Surenth
Panneerselvam

கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுக்கும் வகையில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்த அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஒரு ஆட்சி அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு துணைபோகும் தங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிப்பதற்காகவும், அமைதியான முறையில் யாருக்கும் எந்தவித இடையூறு இல்லாமலும் தங்களது கண்டனத்தை தமிழகம் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களையெல்லாம் பொலிஸார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்துதற்கு வேறு வழி தெரியவில்லை. தயவு செய்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை பொலிஸார் மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு பொலிஸாரை கேட்க்கொள்கின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg