Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஐரோப்பிய நாடாளுமன்றிற்கு விஜயம்

In கனடா
Published: 12:42 GMT, Feb 17, 2017 |
0 Comments
1279
icon_com
This post was written by : Sylviya
14

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau), நேற்று (வியாழக்கிழமை) பிரான்ஸின் ஸ்ராஸ்பர்க்கில் (Strasbourg) உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றின் தலைவர் அந்தோனியோ தஜானியை (Antonio Tajani) நேரில் சந்திக்கும் பொருட்டே ரூடோ குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்த பொருளாதார மற்றும் வர்த்தக (CETA) ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்தே ரூடோ குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விஜயத்தின் போது ஐரோப்பிய நாடாளுமன்றில் உரையாற்றிய ரூடோ, “ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருந்தால் முழு உலக நாடுகளும் பயன்பெறும். சவாலான சந்தர்ப்பம் ஒன்றை சர்வதேச பொருளாதாரம் எதிர்நோக்கும் போது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட கனடா விரும்புகிறது” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றில் உரையாற்றிய முதல் கனேடியத் தலைவர் ஜஸ்ரின் ரூடோவே என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg