Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கம் கோரும் கால அவகாசத்தை கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும்: சுரேஷ்

In இலங்கை
Published: 03:01 GMT, Feb 18, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Risha
suresh

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கும் 18 மாத கால அவகாசத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் க.சுரேஸ்பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கால அவகாசம் கோருவது அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறை என்றும் கால அவகாசம் நீடித்தால், தமிழ் மக்களின் பிரச்சினை நீர்த்துப் போன பிரச்சினையாக மாறிவிடும். எனவே அரசாங்கம் கோரும் கால அவகாசம் நீடிக்க கூடாது.

கால அவகாசத்திற்கான சம்மதம் தெரிவிக்க வேண்டி ஏற்படின் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்து அந்த நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டால், கால அவகாசத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

கால நீடிப்பு அங்கீகரிக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் மிக அருகில் இருந்து கண்காணிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள சம்பந்தனின் கருத்துக்களை பார்க்கும் போது, தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்கியிருப்பதாக சந்தேகம் எழுகிறது.

கால அவகாசங்கள் நீடிக்காது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஐ.நா பொதுச் சபைக்கு விசாரணைகளை கையளிக்க வேண்டும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடன் கலந்துரையாடி கால அவகாசத்தினை நிராகரிக்க வேண்டும்’ என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg