Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் அமுல்

In இலங்கை
Updated: 04:35 GMT, Feb 18, 2017 | Published: 04:35 GMT, Feb 18, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Risha
rice

இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாவாகவும், உள்நாட்டு நாட்டரிசி ஒரு கிலோகிராம் 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 78 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 80 ரூபாவாகவும், உள்நாட்டு சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 90 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசி விற்பனை தொடர்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின், 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg