Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலாவது ரி-ருவென்ரியில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தியது இலங்கை

In கிாிக்கட்
Updated: 05:26 GMT, Feb 18, 2017 | Published: 05:25 GMT, Feb 18, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Elakkiya
259161

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற முதலாவது ரி-ருவென்ரி போட்டியில் 5 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் அவுஸ்ரேலிய அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.

அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணியின் சார்பில் பிஞ்ச் 43 ஓட்டங்களையும் மைக்கேல் கிளிங்கர் 38 ஓட்டங்களையும் டிராவிஸ் ஹெட் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மாலிங்க 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து 169 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்களால் வெற்றியை தனதாக்கியது.

துடுப்பாட்டத்தில் அசேல குணரத்ன 52 ஓட்டங்களையும் டில்சான் முனவீர 44 ஓட்டங்களையும் டிக்வெல 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அசேல குணரத்ன தெரிவானார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg