Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனவுகளை அடைவதற்கு வலுவான நம்பிக்கை அவசியம்: விராட் கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 06:14 GMT, Feb 18, 2017 | Published: 06:14 GMT, Feb 18, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Elakkiya

கனவுகளை அடைவதற்கு வலுவான நம்பிக்கையும் அயராத உழைப்பும் அவசியம் என இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ள கோரேகாவ் நகரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விராட் கோஹ்லி மேற்படி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ என்னுடைய வார்த்தைகள் உங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்றால் இங்கே கூடியிருக்கின்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் அனைத்து மக்களும் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கூற விரும்புகின்றேன். இதனை என்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றேன். எதனை சாதிக்க விரும்புகின்றேனோ அதற்கு வரம்புகளை வைத்துக் கொள்ளமாட்டேன். உங்களாலும் முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘அண்மையில் இரண்டு சகோதரிகளின் கதை எனது இதயத்தை தொட்டது. மல்யுத்த வீராங்கனைகளான பபிதா மற்றும் கீதா ஆகிய இரண்டு சகோதரிகளும் நாட்டின் பெரும் சாதனையாளர்கள்’ என்று பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg