Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரகசிய வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் மறுப்பு

In இந்தியா
Updated: 06:47 GMT, Feb 18, 2017 | Published: 05:59 GMT, Feb 18, 2017 |
0 Comments
1361
This post was written by : Surenth

ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் முன்வைத்த இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு சபாநாயகர் தனபால் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் அமளி துமளி

நம்பிக்கை வாக்கெடுப்பை இரகசியமாக நடத்தக் கோரி ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக சட்ட மன்றத்தில் சற்று நேரத்திற்கு அமளிதுமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பம்

சட்ட மன்றத்தில் யாரை முதல்வராக தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கூவத்தூரில் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் தற்போது அங்கிருந்த சட்டமன்ற கட்டிடம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் வாக்கெடுப்பின் போது அவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கூவத்தூர் பகுதியில் பேரணி நடத்தியவர்கள் கைது

ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து கூவத்தூர் பகுதியில் பேரணி நடத்திய 30இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூவத்தூர் அடையாறு பகுதியில் கறுப்பு கொடி பிடித்து எடபாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்புக்கள் ஆரம்பம்

சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, அ.தி.மு.க, தி.மு.க.  காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகள் இன்றைய வாக்கெடுப்பு அமர்வில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் காரணமாக அங்கு பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg