Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் கார் குண்டுத் தாக்குதல்: குழந்தை உயிரிழப்பு, 17 பேர் காயம்

In ஐரோப்பா
Published: 06:38 GMT, Feb 18, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Sylviya

துருக்கியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு நகரான விரென்செஹிர் (Viransehir) எனும் பகுதியிலேயே குறித்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, 18 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் எனவும் அவர் நிறுத்தி வைத்திருந்த காரிலிருந்தே குறித்த குண்டு வெடித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பினால் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் பலமாக அதிர்ந்ததாகவும் அருகில் உள்ள நகரங்களுக்கும் குறித்த வெடிப்பின் சத்தம் தெளிவாக கேட்டதாகவும்  பொதுமக்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த துருக்கியின் நீதி அமைச்சர் பேக்கிர் பொஸ்டாக் (Bekir Bozdag), இது ஒர தீவிரவாத தாக்குதலே எனவும் குறித்த பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் எழுதுவினைஞர்கள் ஆகியோரை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குர்தீஷ் போராளிகளே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg