Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மையை நிரூபித்தார் பழனிச்சாமி

In இந்தியா
Published: 07:03 GMT, Feb 18, 2017 |
0 Comments
1246
icon_com
This post was written by : Surenth

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

வாக்கெடுப்பில் 122 பேர் ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பு ஆரம்பம்

சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ள நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.

தி.மு.க., சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் இன்றி வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

பேரவையில் தாக்கப்பட்டேன்: ஸ்டாலின்
சட்டப்பேரவையில் தான் உட்பட தி.மு.க. உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் ஆளுநரிடம் முறையிடவுள்ளதாகவும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக்குள் தி.மு.க.வினர் சத்தியாக்கிரக போராட்டம்

சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சத்தியாக்கிரக போராட்டம்.

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட நிலையில், இதுவரை 20 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

தொடரும் அமளி: இரண்டாவது முறையாகவும் சபை ஒத்திவைப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே தொடர்ந்து அமளி நிலவிவருகின்ற நிலையில், பிற்பகல் ஒரு மணிக்கு கூடிய சட்டமன்றக் கூட்டம் மீண்டும் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேநாளில் இரண்டுமுறை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்

சட்டமன்றம் சற்றுமுன்னர் கூடிய நிலையில், அமளியில் ஈடுபட்டதால் சட்டமன்றத்திலிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீண்டும் கூடியது சட்டமன்றம்

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட பெரும் அமளியை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட சட்டமன்றக் கூட்டம் மீண்டும் கூடியுள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற வளாகத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட மன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேறினார் – சபை ஒத்திவைப்பு

சட்ட மன்ற கூட்டம் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அமளி துமளியில் ஈடுபட்டதன் காரணமாகவே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சபாநாயகரின் மேசை பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு இருந்த ஒலிவாங்கியும் உடைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சபாநாயகர் சபையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் எனவே மதியம் 1 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் சட்ட மன்ற கட்சி தலைவர்கள் உரை

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் சட்ட மன்ற கட்சி தலைவர்களின் உரை தற்போது சட்டமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, கட்சி தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இதன்போது உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், எதற்காக இந்த அவசர நம்பிக்கை வாக்கெடுப்பு எனவும் இதனை இன்னும் ஒரு வாரத்திற்கு பிற்போடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் மறுப்பு

ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் முன்வைத்த இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு சபாநாயகர் தனபால் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் அமளி துமளி

நம்பிக்கை வாக்கெடுப்பை இரகசியமாக நடத்தக் கோரி ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக சட்ட மன்றத்தில் சற்று நேரத்திற்கு அமளிதுமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பம்

சட்ட மன்றத்தில் யாரை முதல்வராக தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg