Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியா தொடரை இழப்பது உறுதி: ஹர்பஜன்சிங்

In கிாிக்கட்
Updated: 07:27 GMT, Feb 18, 2017 | Published: 07:27 GMT, Feb 18, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Elakkiya
235309.3

இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடர் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இந்த தொடரில் அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அந்த அணி நன்றாக விளையாடினால்தான் இந்த நிலைமை. அவ்வாறு விளையாடவில்லை என்றாலும் இந்தியா 4:0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றும்

இந்திய ஆடுகளங்களில் சமாளிப்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் முதல் பந்தில் இருந்தே பந்து சுழன்று திரும்ப ஆரம்பித்து விட்டால், அவுஸ்ரேலிய வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. அவுஸ்ரேலிய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் வந்திருந்தாலும் சாதிக்கக்கூடிய அளவுக்கு தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களாக தெரியவில்லை.

இங்குள்ள வித்தியாசமான சூழலில் பந்து வீசுவது கடினம்’ என்று தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg