Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.கவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்

In
Updated: 07:59 GMT, Feb 18, 2017 | Published: 07:50 GMT, Feb 18, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Surenth
Assembly in Tamilnadu

சட்ட மன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக தி.மு.கவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெளியேற்றப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் மீண்டும் எப்போது உள்ளே அழைக்கப்படுவார்கள் என்ற தகவல் ஏதும் இன்னமும் வெளியாகவில்லை.

சட்ட மன்றம் கட்டட பகுதியில் துணை இராணுவம் குவிப்பு

தற்போது சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சட்ட மன்றம் அமைந்துள்ள பகுதிகளில் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்ட மன்றத்தை சுற்றி உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கியேலே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சர் மூத்த அமைச்சர்களுடன் இரகசிய பேச்சு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.கவின் மூத்த அமைச்சர்களுடன் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேச்சுவார்த்தை சட்ட மன்ற கட்டடத்தொகுதிலேயே இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

சட்ட மன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேறினார் – சபை ஒத்திவைப்பு

சட்ட மன்ற கூட்டம் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அமளி துமளியில் ஈடுபட்டதன் காரணமாகவே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சபாநாயகரின் மேசை பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு இருந்த ஒலிவாங்கியும் உடைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சபாநாயகர் சபையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் எனவே மதியம் 1 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் சட்ட மன்ற கட்சி தலைவர்கள் உரை

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் சட்ட மன்ற கட்சி தலைவர்களின் உரை தற்போது சட்டமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, கட்சி தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இதன்போது உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், எதற்காக இந்த அவசர நம்பிக்கை வாக்கெடுப்பு எனவும் இதனை இன்னும் ஒரு வாரத்திற்கு பிற்போடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் மறுப்பு

ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் முன்வைத்த இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு சபாநாயகர் தனபால் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் அமளி துமளி

நம்பிக்கை வாக்கெடுப்பை இரகசியமாக நடத்தக் கோரி ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக சட்ட மன்றத்தில் சற்று நேரத்திற்கு அமளிதுமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg