Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்றை நாம் அனைவரும் நிறுத்த வேண்டும்: டோனி பிளெயார்

In
Published: 08:52 GMT, Feb 18, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவதற்கு  வணிகர்கள், பிரசார குழுக்கள், மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளெயார் (Tony Blair) குரல் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டனில் இருந்து கருத்து தெரிவித்த டோனி பிளெயார், “எப்படியாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலக்க வேண்டும் எனும் குறிக்கோளிலேயே தெரேசா மே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதற்கு சவாலாக அமையும் வண்ணம் எல்லோரும் ஒன்றுதிரண்டு வர வேண்டும். பிரெக்சிற் தொடர்பில் போதிய விளக்கம் இல்லாமலேயே பிரித்தானியர்கள் கடந்த வருடம் வாக்களித்திருந்தனர்” என தெரிவித்துள்ளார்.

பிளெயாரின் கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், “அடுத்த தடவை இது போன்ற கருத்துக்களை பிளெயார் தெரிவிக்கும் போது பிரித்தானியர்கள் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிராது தத்தமது வேலைகளில் அக்கறை செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடவடிக்கைகளை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக மே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg